கோபால்சாமி மலை அடிவாரத்தில் அகத்தியர் குருபூஜை விழா

கோபால்சாமி மலை அடிவாரத்தில் அகத்தியர் குருபூஜை விழா

அகத்தியர் குருபூஜை

அங்கலக்குறிச்சியை அடுத்த கோபால்சாமி மலை அடிவாரத்தில் நடைபெற்ற அகத்தியரின் குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
அங்கலக்குறிச்சியை அடுத்த கோபால்சாமி மலை அடிவாரத்தில் சித்தர்களுக்கு எல்லாம் மகானாக விளங்கும் அகத்தியரின் குருபூஜை மற்றும் திருவாசகம் முற்றோற்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மகா குருவிற்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு பேரூர் பட்டீஸ்வரர் திருவாசக குழு சார்பில் திருவாசகர் முற்றோத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூசை அன்னம் பாலிக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.கைலாய வாத்தியம் முழங்க வெள்ளிக்கவசம், பால்குடம்,முளைப்பாரி உள்ளிட்டவைகளை பக்தர்கள் பல்வேறு வீதிகள் வழியாக உலா வந்து எடுத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story