திமுக அரசை அகற்ற அதிமுக வழக்கறிஞரணி உறுதிமொழி
உறுதிமொழி ஏற்பு
கரூர் அடுத்த, வெண்ணமலை பகுதியில் உள்ள ராசி முருகன் மஹாலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட கட்சி வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில், வழக்கறிஞர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர். அப்போது திமுகவை தமிழகத்திலிருந்து அகற்ற எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இயக்கமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பேரியக்கமாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் வாழும் இந்த நாட்டை ஆளும் என்ற ஜெயலலிதாவின் சூளுரையை நிறைவேற்ற, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தமிழகத்தில் உள்ள திமுக அரசை அகற்றுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
Tags
Next Story