ரயில் மறியல் செய்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கைது

ரயில் மறியல் செய்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கைது

ரயில் மறியல்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னிந்திய நதியில் இணைப்பு விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் அருகில் இருந்து தலைவர் அய்யாக்கண்ணு மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் 25பெண்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக மேம்பாலம் பகுதி வழியாக வந்து ரயில் நிலையத்தில் ஒண்ணாவது நடைமேடையில் வந்த சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை மரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க கோரியும், 2023 மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசு வழங்கிய பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை கண்டித்தும் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததற்கும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்ததற்கும் காரணமான மத்திய அரசை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

மாநில துணை பொது செயலாளர் தங்கமுத்து மாநில செயலாளர்கள் மகேந்திரன் கோவிந்தசாமி மனோகரன், மற்றும் பொறுப்பாளர்கள் முருகேசன், அகோரம், பாலகணேஷ், செந்தில்குமார், தங்க மகேஸ்வரன், செந்தில், முருகன், பாலகிருஷ்ணன், கண்ணன், சரவணன் ராதாகிருஷ்ணன், சங்கர், ராசு ,சசிகுமார் உட்பட தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் மற்றும் ரயில்வே துறை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.DMK A Raja, PSG, Facebook, Tata Motors share price,Nothing Phone 2a,Champions League,MS Dhoni,Women's Day,Meg Lanning,IIFL share price,#instagramdown,#facebookdown,#NewLife,#METADMK A Raja, PSG, Facebook, Tata Motors share price,Nothing Phone 2a,Champions League,MS Dhoni,Women's Day,Meg Lanning,IIFL share price,#instagramdown,#facebookdown,#NewLife,#META

Tags

Next Story