அம்பேத்கர் நினைவுதினம் மாவட்ட நிர்வாகம் மரியாதை

அம்பேத்கர் நினைவுதினம் மாவட்ட நிர்வாகம்  மரியாதை
X

அம்பேத்கர் நினைவுதினம் மாவட்ட நிர்வாகம் மரியாதை

மயிலாடுதுறை அருகே பட்டவர்ர்த்தியில் அம்பேத்கர் நினைவு தினத்தில் அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகமே நினைவஞ்சலி ஏற்பாடு
மயிலாடுதுறை மாவட்டம் ,பட்டவர்த்தியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தன்று, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நினைவஞ்சலி செலுத்துவதில், இரண்டு ஆண்டுகளாக, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. சென்ற ஆண்டு, டிஐஜி முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பட்டவர்த்தியில் தொடக்க வேளாண்மை, கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக, மாவட்ட நிர்வாகமே டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செய்தனர் . அதில் ஒரு பிரிவினர் நினைவஞ்சலியில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டும், பட்டவர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு ,அம்பேத்கர் நினைவஞ்சலி செலுத்துவதக்ற்கு ,ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மீனா தலைமையில், 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story