இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து




விபத்து நிகழ்ந்த இடம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சித்தலவாய் மூலக்கரை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 31. இவர் நவம்பர் 15ஆம் தேதி இரவு 9:15 மணியளவில் திருச்சி- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திகிராமம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தினேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இந்த விபத்தில், வாகனத்துடன் கீழே விழுந்த தினேஷ் குமாருக்கு ,வலது கை, வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த தினேஷ் குமாரின் தாயார் ரேவதி என்பவர், இது குறித்து தாந்தோணிமலை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நவம்பர் 16ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, தினேஷ்குமார் வானத்தின் மீது மோதிய வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.





