கரூர் அருகே நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத பைக் மோதி விபத்து
காவல் நிலையம்
மருத்துவமனை அருகே நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தோட்ட குறிச்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மனைவி கலையரசி வயது 55. இவர் மே 9ம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் அடுத்த காந்திகிராம பகுதியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவழியாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று, நடந்து சென்ற கலையரசி மீது மோதி விட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் இடது காலில் பலத்த காயம் அடைந்த கலையரசியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கலையரசி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? டூவீலரை ஒட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல் துறையினர்.