கரூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

கரூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
X

காவல் நிலையம் 

கரூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, செம்படாபாளையம், குறுக்கு தெருவை சேர்ந்தவர் பூபதி வயது 47. இவர் ஜனவரி 27ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் கரூர்- சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் கரூர் - சேலம் சாலையில் உள்ள ரெனால்ட் கார் ஷோரூம் அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம், பூபதி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு, நிற்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் சென்றது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பூபதிக்கு இடுப்பு, வலது,இடது கால்கள், கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பூபதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் யார்? என்ற கோணத்தில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story