வரதட்சணை எதிர்ப்பு தின பேரணி - ஆட்சியர், எஸ்.பி துவக்கி வைப்பு

X
விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரதட்சணை எதிர்ப்பு தின பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எஸ்பி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ,வரதட்சணை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக, வரதட்சணைக்கு எதிராக, வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம், என்று மாணவ மாணவிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், கையில் பதாகைகளை ஏந்தியபடி, முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.
Tags
Next Story
