ஆன்லைன் மூலம் பணியாளர்கள் நியமனம்

ஆன்லைன் மூலம் பணியாளர்கள் நியமனம்

வாக்கு எண்ணும் மையம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியாளர்கள் நுன் பார்வையாளர்கள் உதவியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்கு எண்ணும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்களுக்கு, உதவியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காபாரதி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயராகவன் உள்ளனர்.

Tags

Next Story