மனைவியுடன் தகராறு;கணவரை காணவில்லை

தாந்தோணிமலை குடும்பத்தகராறு காரணமாக கணவரை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் மனைவி புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிவசக்தி நகர், நாலாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் வயது 38. இவரது மனைவி ராஜேஸ்வரி வயது 33. ராஜேஷ் அப்பகுதியில் கார்பென்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ், டிசம்பர் 22ஆம் தேதி காலை 8:30- மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறியவர், வீடு திரும்பவில்லை. ராஜேஷ் வழக்கமாக வேலைக்கு செல்லும் இடங்களிலும்,அவரது நண்பர்களிடத்தும், உறவினர்கள் வீட்டிலும் விசாரித்துப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால், இது குறித்து ராஜேஸ்வரி தனது கணவனை காணவில்லை என தாந்தோணி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான ராஜேஷ்-ஐ தேடி வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Next Story