பருத்திக்கான பாக்கி ரூ. 1.38 கோடி; ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முற்றுகை

பருத்திக்கான பாக்கி  ரூ. 1.38 கோடி; ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முற்றுகை

பருத்திக்கான பாக்கித்தொகை 1.38 கோடி ரூபாய் வழங்காத குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முற்றுகையிடப்பட்டது. 

பருத்திக்கான பாக்கித்தொகை 1.38 கோடி ரூபாய் வழங்காத குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முற்றுகையிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய 4 இடங்களில், வேளாண் விற்பனைக்குழு சார்பில் ,ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடைபெறும் பருத்தி ஏலத்தில் ,கலந்துகொண்டு விற்பனை செய்வது வழக்கம். குத்தாலம் பகுதியில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் , 2022-23 ஆம் ஆண்டில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஏலத்தில், விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்துள்ளனர்.

ஒரு சிலரை தவிர மற்ற விவசாயிகளுக்கு உண்டான ,1கோடியே 38 லட்ச ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை. நடையாய் நடந்த விவசாயிகள், குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, வந்த அதிகாரிகளிடம் ,பணம் எப்போதும் வரவு வைக்கப்படும் என்று கேட்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று கூறியதை அளித்து தற்காலிகமாக விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story