மயிலாடுதுறைக்கு "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை

முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை
மயிலாடுதுறைக்கு வருகை தந்த முத்தமிழ்த்தேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரவேற்பு மயிலாடுதுறை மாவட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை தந்தது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் .ராஜகுமார் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி , சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி , குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் த மகேந்திரன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி , மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
