கரூரில் கனிமொழி விளக்கம் !
கனிமொழி
விவசாயிகளுக்கு கலைஞரும், காங்கிரஸ் அரசும் கடன்களை ரத்து செய்தது. கரூரில் கனிமொழி விளக்கம் அளித்தார்.
விவசாயிகளுக்கு கலைஞரும், காங்கிரஸ் அரசும் கடன்களை ரத்து செய்தது. கரூரில் கனிமொழி விளக்கம். கரூர் நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி போட்டியிடுகிறார். இன்று இவருக்கு ஆதரவாக, திமுக கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழி, ஜோதிமணியை ஆதரித்து, கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய கனிமொழி, கலைஞர் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்தார். இதே போல காங்கிரஸ் ஆட்சியிலும் கடன்கள் ரத்து செய்யப்பட்டது. இதே போல பிஜேபி ஆட்சியிலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக் கூறினால், ரத்து செய்வதில்லை. மாறாக 68,607 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாவம், மிகவும் கஷ்டப்படும் அவர்களுக்கு தள்ளுபடி செய்ததாக கிண்டல் அடித்தார் கனிமொழி. தொடர்ந்து பேசிய அவர், 100 நாட்கள் வேலைக்கு வரும் ஆண் மற்றும் பெண்களுக்கு நான்கு மாதம் முதல் ஆறு மாதம் வரை சம்பளம் போடாமல் இழுத்து அடிக்கிறார்கள் என குற்றம் சுமத்திய அவர், இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றார்.
Next Story