அடகு வைத்த நகையை திருப்பி கேட்டு அரிவாள் வெட்டு

அடகு வைத்த நகையை திருப்பி கேட்டு அரிவாள் வெட்டு

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்து மூழ்கி போன நகையை திருப்பி கேட்டு நடந்த தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மயிலாடுதுறை அருகே உள்ள கேசிங்கன் அண்ணா நகர் பெரியதெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சுரேஷ் (40) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுரேஷ் என்பவரும் நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் மகன் சுரேஷ் நகையை வாங்கி இரண்டு சுரேஷ்களும் அடகு வைத்து செலவு செய்து விட்டனர் , அதை மீட்க முடியாமல் மூழ்கி போய் விட்டது. என் நகைகளை மீட்டு கொடு என்று சுப்பிரமணியன் மகன் சுரேஷிடம் நகையைகேட்டு அடிக்கடி ஈடுபட்டு வந்துதகராறில் ஈடுபட்டுள்ளார்.

10 ஆண்டுகளாக இந்த சன்டை நீண்டு வந்தது. சம்பவ தினத்தன்று இரவு ஜெயராமன் மகன் சுரேஷ் தன் மகளுக்கு திருமணத்திற்காக உறவினர்களை அழைப்பதற்கு சென்றபோது சுப்பிரமணியன் மகன் சுரேஷ் அவரை தடுத்து நிறுத்தி என் நகையை மீட்டுக் கொடுக்காமல் உன் மகளுக்கு திருமணம் செய்கிறாயா என்று கேட்டு திட்டி கையில் வைத்திருந்த அறிவாளால் தலையில் வெட்டியும் தடுத்த கையையும் வெட்டியுள்ளார், அந்த நேரத்தில் அவரது மகனும் சேர்ந்து கொண்டு அடிபட்ட சுரேஷை கட்டையால் தாக்கிப்போட்டுவிட்டு ஓடி விட்டனர்.

படுகாயம் அடைந்த சுரேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சுரேஷ் அளித்த புகாரின்பேரில் போலீசார் தந்தை மகன் மீது வழக்கு பதிவு செய்து சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story