பொள்ளாச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விழிப்புணர்வு

பொள்ளாச்சியில்  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விழிப்புணர்வு

ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது

பொதுமக்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொள்ளாச்சியில் வானில் ராட்சத பலூன் ஏற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19.ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் இன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100% வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சச பலுனை வானில் பறக்க விடப்பட்டது.. பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கேத்தரின் சரண்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவான இடங்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்த மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா தெரிவித்தார்.

Tags

Next Story