ஆதிதிராவிடர் பழங்குடி நலத்துறை சார்பில் வன்கொடுமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆதிதிராவிடர் பழங்குடி நலத்துறை சார்பில் வன்கொடுமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
X

சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

மயிலாடுதுறையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தாட்கோ மேலாளர் பரிமளா சிறப்பு விருந்தினர் டிஎஸ்பி கலைகதிரவன் கலந்துகொண்டு வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தும், அதில் உள்ள சட்ட நுணுக்கங்கள், எந்த அடிப்படையில் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து பயிற்சியாளர் கார்த்திக்கனிராஜ் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தும், ஆதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எடுத்துரைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெண்டும் என்று தெரிவித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தாட்கோ மேலாளர் பரிமளா சிறப்பு விருந்தினர் டிஎஸ்பி கலைகதிரவன் கலந்துகொண்டு வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தும், அதில் உள்ள சட்ட நுணுக்கங்கள், எந்த அடிப்படையில் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து பயிற்சியாளர் கார்த்திக்கனிராஜ் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தும், ஆதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எடுத்துரைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெண்டும் என்று தெரிவித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story