சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, சத்துணவு திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தியும், 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அரசுப் பணியில் பதவி உயர்வு வழங்கிடவும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 6750 அகவிலைபடியுடன் வழங்கிட வலியுறுத்தியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிரப்பிட வலியுறுத்தியும், ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story