சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு  குறித்து விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ பாடல் வெளியிடப்பட்டு, விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது.

மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ பாடல் வெளியிடப்பட்டு, விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்.14ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கடைபிடிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை மற்றும் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலைப்பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோ குறுந்தகடு (சிடி) வெளியிடு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஊழியர்கள் நடித்து சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கும், சாலை விதிமுறைகள் பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட வீடியோ பதிவு விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை எஸ்.பி.மீனா வெளியிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெளியிடப்பட்ட பாடலை உற்று கவனித்தால் அதில் உள்ள பொருட்கள் அனைவருக்கும் புரியும் சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லாமல் நாம் வாகனம் இயக்க வேண்டுமென்று எஸ்பி மீனா அறிவுரை வழங்கினார் ரொட்டேரியன் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story