சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விழிப்புணர்வு வழங்கிய போலீசார் 

மயிலாடுதுறை தருமபுரம் குருஞான சம்பந்தர் மேல்நிலைப் பள்ளியிலும், சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் தருமபுரம் குருஞான சம்பந்தர் மேல்நிலைப் பள்ளியிலும், சீர்காழி உட்கோட்டத்தில் சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில்காலை மாணவ மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்லும் போது சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்வது, இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணிப்பது, தலைக்கவசம் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தினை ஓட்டிச் செல்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் எனவும், மேலும் வாகனத்தினை ஒட்டிச் சென்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என மாணவ மாணவிகளிடையே விளக்கப்பட்டது.

Tags

Next Story