முழு சுகாதார தூய்மை பணிகள் விழிப்புணர்வு !

X
தூய்மை பணிகள் விழிப்புணர்வு
மயிலாடுதுறை நகராட்சி ஏழாவது வார்டுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்கும் கூடைகளை அதிகாரிகள் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ள செங்கமேட்டு தெருவில்முழு சுகாதார தூய்மை பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குடியிருப்பு பகுதி மக்களுக்கு மக்கும் குப்பைக்கு பச்சை நிறக்கூடையும், மக்காத குப்பைக்காக நீல நிறக்கூடையை சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான வே.அமுதவல்லி , மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா , நகராட்சி ஆணையர் சங்கர் வார்டு உறுப்பினர் மணிமேகலை ஆகியோர் உள்ளனர்.
Next Story
