விழிப்புணர்வு ஓவிய போட்டி; கால்களால் வரைந்த மாற்றுத்திறனாளி மாணவி

விழிப்புணர்வு  ஓவிய போட்டி; கால்களால் வரைந்த மாற்றுத்திறனாளி மாணவி

மயிலாடுதுறையில் நெகிழி விழிப்புணர்வு ஓவிய போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி கால்களால் ஓவியம் தீட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. 

மயிலாடுதுறையில் நெகிழி விழிப்புணர்வு ஓவிய போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி கால்களால் ஓவியம் தீட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை டாக்டர் வரதாச்சாரியார் நகர பூங்காவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் நெகிழியால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நெகிழி விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான சுவர் ஓவியப்போட்டி நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கோயமுத்தூர், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சுவர் ஓவியப்போட்டியில் பங்கேற்று பல வண்ண நிறங்களில் பெயிண்டிங்கால் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் சிறு வயது முதல் வளர்ந்து வரும் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவி லட்சுமி, மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியத்தை தனது இரண்டு கால்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

மாணவி தனது கால்களை பயன்படுத்தி வரையும் ஓவியத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

Tags

Next Story