பாலியல் வன்முறைகெதிரான விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் பாலியல் வன்முறைகெதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் பாலியல் வன்முறைகெதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் 100-க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்;. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இதில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குடும்ப வன்முறை தடுப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முழக்கமிட்டவாறு சென்றனர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் குழந்தைகள் மற்றும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இப்பேரணியில், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்குமரன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
Next Story