போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சியில் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொள்ளாச்சி..ஜூன்.22 கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனையடுத்து கள்ளச்சாராயம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து காவல்துறையினர் பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி காவல்துறையினர் மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இந்தப் பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோவை சாலை, மத்திய பேருந்து நிலையம், புதிய திட்ட சாலை வெங்கட்ரமணன் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி சார் அலுவலகத்தில் நிறைவடைந்தது..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 50.க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது மிகவும் கொடூரமான சம்பவம் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது கள்ளச்சாராயம் மட்டும் அல்லாது கஞ்சா, கூலிப், பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதை இளைஞர்கள் மாணவர்கள் தவிர்க்க இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணி நடைபெற்றதாக காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags

Next Story