குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமையை தடுத்தல் குறித்த, குழந்தைகளுக்கான நடை பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உறுதிமொழியை வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதனை திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, உதவி பாதுகாப்பு அலுவலர் மஞ்சு, குழந்தைகள் நல குழு தலைவர் மணிமொழி ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள், செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவ- மாணவியர், குழந்தைகள் இல்ல பணியாளர்கள், ஜெயம் டிரஸ்ட் கலைக்குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து காளியப்பனுர், தாந்தோணி மலை வழியாகச் சென்று அப்பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

Tags

Next Story