மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் “ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்" 2023 அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ம் தேதி வரை அனுசரிப்பதை முன்னிட்டு அரசு அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொணடனர்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மைமையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்,

ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் அந்த உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் சைபுதின் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story