அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - வட இந்தியர்கள் கொண்டாட்டம்

கரூரில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட மாநில தொழில் துறையினர் ராமரை வழிபட்டு, ஆடி பாடி கொண்டாடினர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாடெங்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கரூரில் பல்வேறு தொழில்கள் புரிந்து வரும் வட இந்தியர்கள் "ராம்தேவ் சேவா சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இன்று கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு ஸ்ரீராமன் திருவுருவப்படத்திற்கு பூஜைகள் செய்து ஆடி பாடி கொண்டாடினர். அப்போது "ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷங்களை எழுப்பினர். மேலும், ரகுபதி ராகவ ராஜா ராம், பசீத்த பாவன சீதாராம் என்ற பக்தி பாடலையும் மனம் உருகி பாடி வணங்கினர்.

Tags

Next Story