அடுத்ததடுத்து வாகனங்கள் மோதல் - 5 பேர் காயம்

அடுத்ததடுத்து வாகனங்கள் மோதல் - 5 பேர் காயம்
X

காவல் நிலையம் 

கரூர் அருகே சைக்கிள், டூவீலர்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

கரூர், தோரனக்கல்பட்டி அருகே உள்ள பல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் உதயகுமார் வயது 19. இவர் கரூர் - மதுரை சாலையில் அமராவதி பாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இவரது சைக்கிளுக்கு முன்னே கரூர் வஞ்சிலியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் நிஜந்தன் வயது 43 என்பவர், கரூர் வையாபுரி நகர், 1வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இதே வேளையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் மாயி வயது 26, அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்பவரை பின்னால் அமரவைத்து டூவீலரில், வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் சைக்கிளில் சென்ற உதயகுமார் மீதும், அதற்கு முன்னால் நிஜந்தன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உதயகுமார், நிஜந்தன், ரமேஷ், மோசஸ், மாகி ஆகிய ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உதயகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாயி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story