தருமபுர ஆதீன ஆபாச வீடியோ வழக்கில் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

தருமபுர ஆதீன ஆபாச வீடியோ வழக்கில் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Bail plea dismissed again in Darumapura Adeena obscene video case


தருமைஆதீன ஆபாச வீடியோவழக்கில் 2 பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் ஐந்தாவதுமுறை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தருமபுர ஆதீன ஆபாச வீடியோவை காட்டி பணம் கேட்டு கொல்ல முயற்சித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் வினோத் மற்றும் சீர்காழி முன்னாள் பாஜக ஒன்றிய செயலாளர் விக்னேஷ் ஆகிய இருவரின் ஐந்தாவது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுர ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் வினோத் மற்றும் சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ் ஆகியோரின் ஐந்தாவது ஜாமீன் மனு விசாரணைக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வந்தது. அப்பொழுது வினோத் மற்றும் விக்னேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இருவரும் கடந்த 75 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவரான ஸ்ரீநிவாஸ் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்படி இரு நபர்களின் ஜாமீன் மனுக்கள் அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார்கள்.

அரசு தரப்பில் ஆஜரான மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டாக்டர். இராம. சேயோன் சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கில் சம்மந்தப்பட்ட குடியரசு மற்றும் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நான்காவது முறை ஜாமீன் கேட்டு சென்றவாரம் விண்ணப்பித்த போது இருந்த நிலவரத்தில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கில் தொடர்புடைய முக்கிய நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டுமென்றும் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மேற்படி இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.விஜயகுமாரி சென்ற வாரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கும் தற்போதைய ஜாமீன் மனுவிற்கும் இடைப்பட்ட காலத்தில் வழக்கில் எந்த மாற்றமும் இல்லை, ஏனைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும், வழக்கின் விசாரணை முற்றுபெறவில்லை ஆகிய அரசு தரப்பு வாதங்களை ஏற்று இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து ஐந்தாவது முறை தள்ளுபடி என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story