கரூரில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ 36.95கோடி வங்கி கடன்

கரூரில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ 36.95கோடி வங்கி கடன்

கடனுதவி வழங்கல்

கரூரில், 845 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ 36.95 கோடி வங்கி கடன் வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 519 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூபாய் 27.5 கோடி மதிப்பில்,

வங்கி கடன் உதவி வங்கி பெருங்கடல் உதவி சமுதாய முதலீட்டு நிதிக்கான வங்கி கடன் உதவி வங்கி கடன் உதவி வட்டார வணிக வளமைய கடனுதவி, ஒருங்கிணைந்த வங்கிக் கடன் உதவிகள் என 5118 பேர் உள்ள 519 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 27.05 கோடி கடன் வழங்கப்பட்டது. இதே போல தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சுய வேலைவாய்ப்பு திட்டம் சுழல் நிதி கடன் வங்கி கடன் என 3122 பேர் உள்ள 277 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் ஒன்பது புள்ளி 58 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டது.

இதே போல வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானியத்திற்கான வங்கி கடன் உதவி சமுதாயத் திறன் பள்ளிகள் அமைப்பதற்கான கடன் உதவி மற்றும் பயிற்சி உபகரணங்கள் பெறுவதற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் இன்று மட்டும் 8,318 பேர் உள்ள 845 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூபாய் 36.95 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

Tags

Next Story