கரூரில் பயனாளிகளுக்கு ரூ.107.28 கோடி வங்கி கடன்

கரூரில் பயனாளிகளுக்கு ரூ.107.28 கோடி வங்கி கடன்

கடனுதவி வழங்கல்

கரூரில்,1062 பயனாளிகளுக்கு ரூ.107.28 கோடி வங்கி கடன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.

கரூரில், அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் முகாமில், 1062 பயனாளிகளுக்கு ரூ.107.28 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறைகளின் மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகளின் மேன்மைக்காக, கடன் மேளா மூலம் வங்கி கடனுதவிக்காண காசோலைகள் மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டது. இந்தக்கடன் மேளாவில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்துடன் இணைந்து மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனைத்துறை. கால்நடைத்துறை, கைத்தறித்துறை, வாழ்ந்துகாட்டுவோம் திட்டம், கதர் கிராம தொழில் ஆணையம், கதர் கிராம தொழில் வாரியம், கூட்டுறவுத்துறை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பாக அச்சு உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடங்குவதற்கும், ஜவுளி கடைகள், மளிகை கடைகள், புத்தகம் நிலையம்,அரிசி ஆலை, கனரக வாகனம் வாடகைக்கு விடுவதற்கும் & தையல் நிலையம் போன்ற பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்காக தொழில் கடன் உதவி 1062 பயனாளிகளுக்கு ரூ.107.28 கோடி மதிப்பீட்டில் திட்ட கடனுதவிக்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர். வசந்தகுமார், சி.ஐ.ஐ தலைவர் செந்தில் சங்கர், வங்கி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story