பாஜக சுனாமியாக மாறியுள்ளது: பாஜக வேட்பாளர்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்
50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியும் பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி - பாஜக சுனாமியாக மாறியுள்ளது.
இதில் அதிமுக, திமுக இரண்டு பேரும் சுனாமி அலையில் சிக்கி காணாமல் போய்விடுவார்கள் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் பேட்டி.. பொள்ளாச்சி.. ஏப்ரல்..12 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் இன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எரிசனம்பட்டி,
தேவனூர்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் பேசிய அவர் பொள்ளாச்சியில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை தமிழ்நாடு,கேரளா இரு மாநில அரசுகள் பேசி தான் நிறைவேற்ற முடியும் ஆனால் மத்திய அரசு எதையும் செய்ய முடியாது என்று பேசினார்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடையே பேசிய பாஜக வேட்பாளார் வசந்தராஜன்., 500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல் 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று அதிமுக ஆட்சியில் ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக ஊழல் செய்து வரும் திமுக மற்றும் அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்றும் தற்போது நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்தப் பகுதிக்குச் சென்றாலும் மக்கள் மிகுந்த ஆதரவும் வரவேற்கும் அழைத்து வருகின்றனர் இதனால் பாஜக சுனாமியாக மாறியுள்ளது.
இதில் அதிமுக, திமுகவும் இரண்டு கட்சிகளும் பாஜக எனும் சுனாமி அலையில் சிக்கி காணாமல் போய்விடுவார்கள்.