கத்திக்குத்தி ஏற்பட்டு காயமடைந்த பாஜக பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் தகராரை தட்டிக் கேட்டபோது கத்திக்குத்தி ஏற்பட்டு காயமடைந்த பாஜக பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - கொலை வழக்காக மாற்றி கிணத்துக்கடவு போலீசார் விசாரணை..
பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு காரச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் 42 வயது. இவர் பாஜக பிரமுகர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் 36 வயது என்பவர் மளிகை கடைநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரி செல்வத்திற்கும் அவரது சகோதரர் ராஜ்குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ராமலிங்கம் அவர்களை தட்டி கேட்டதுடன் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இதில் தகராறில் ஈடுபட்ட மாரி செல்வம், மற்றும் ராஜ்குமார் பாஜக பிரமுகர் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.. இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை சாலையில் உள்ள சுந்தராபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அழைக்கப்பட்டு வந்தனர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் மாரிசெல்வம் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த பாஜக பிரமுகர் ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்பு அடிதடி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் ஏற்பட்ட தகராரை தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story