பொள்ளாச்சியில் பாஜக மகளிர் அணியினர் கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி

கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணியினர் பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்..

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 10 ஆண்டு காலம் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிற பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறிப்பாக மகளிருக்கு செய்து வரும் திட்டங்களை போற்றும் விதமாக நாடு முழுவதும் பொது மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மாவட்ட தலைவர் அருணா தேவி தலைமையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூச்சனாரி கிராமத்தில் 10 ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்தும், குறிப்பாக பெண்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு வீதி வீதியாக சென்று கிராமங்கள் தோறும் பொது மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.. கருவுற்ற பாலூட்டும் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களில் போஷன் அபின்யா திட்டம் மூலம் ஊட்டச்சத்து பரிசோதனைகள், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கல்வி, சேமிப்பில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக பயன்பெற்று வருகிறது. பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் திட்டங்கள், உஜ்வாலா திட்டத்தின் மூலம் பெண்கள் புகையிலிருந்து விடுபட்டு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை இல்லாமல் கிராமப்புற பெண்கள் மிகவும் சிரமம் அடைந்த நிலையில் சுவிஸ் பாரத் திட்டம் கழிப்பறைகள் கட்டும் திட்டம்,பெண்கள் சுயதொழில் தொடங்க முத்ரா வங்கி கடன் திட்டம் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுவதற்காக 33 சதவீதம் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்கள்பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவர் அருணா தேவி தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story