வாகனம் மோதி காட்டுப்பன்றி பலி

வாகனம் மோதி காட்டுப்பன்றி பலி

காட்டுபன்றி பலி

ஆழியாறு வனப்பகுதியில் வாகனங்களில் செல்லும் போது வன விலங்குகளை துன்புறுத்தாமல் கவனமாக சாலையில் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி,யானை,மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்து ஆழியார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது வலம் வரும்.வால்பாறை, டாப்ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு ஆழியாறு சாலை பிரதான வழியாக இருந்து வரும் நிலையில் இந்த சாலைகளில் உலா வரும் வனவிலங்குகள் அவ்வப்போது வாகனங்கள் மோதி பரிதாபமாக பலியாவது உண்டு.

இந்நிலையில் ஆழியார் காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டுப்பன்றி ஒன்று சாலையில் பரிதாபமாக உயிர் இழந்தது.இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் காட்டு பன்றியின் சடலத்தை பத்திரமாக அப்புறப்படுத்தினர். ஆழியார் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அடர்ந்த காட்டுப்பகுதி ஒட்டி உள்ள சாலைகளில் பயணிக்கும் போது வன விலங்குகளுக்கு தொந்தரவு இல்லாமல் அவற்றை துன்புறுத்தாமல் கவனமாக சாலையில் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story