மயிலாடுதுறை மணி கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்
:- ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் 1943 - ஆம் ஆண்டு அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100அடி உயரம் கொண்ட மணி கூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
மயிலாடுதுறை மணிகூண்டுவிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்கட்டுப்பாட்டு அறை 100ஐ தொடர்பு கொண்டு மாமநபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறபப்டுகிறது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக போலீசார் மணிகூண்டு பகுதியில் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை நடத்தினர்.
திருவாரூரில் இருந்து மூப்பனார் குகன் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மயிலாடுதுறை நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார்’ விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.