அறுவை சிகிச்சையில் சிறுவன் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழ்நாடு இந்து புரட்சி முன்னணியினர் ஆறுதல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் கிஷோர் என்ற மாணவனுக்கு வயிற்றுவலி காரணமாக கடந்த 29ம் தேதி மயிலாடுதுறையில் உள்ள அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் (அப்பன்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கிஷோர் உயிரிழந்தார். சிறுவன் கிஷோர் உயிரிழந்ததை கூறாமல் கிஷோருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்ததாகவும் 12 வயது சிறுவனுக்கு வயதைக் கருத்தில் கொள்ளாமல் உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகவும் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியடம் மனு அளித்தள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு இந்து புரட்சி முன்னணி நிறுவனத் தலைவர் சந்திரகுமார், மாநில கொள்கைபரப்பு செயலாளர் அனகை ஏசெல்வம் மற்றம் கட்சியினர் உயிரிழந்த சிறுவன் கிஷோர் வீட்டிற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளிக்கையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை சிறுவனின் குடும்பத்தார் முழுமையாக நம்புவதாகவும், ஆனால் இதுவரை மருத்துவமனை நிர்வாகத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுவனின் உயிரிழப்பு தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படவில்லை. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறுவன் கிஷோரின் மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.