அறுவை சிகிச்சையில் சிறுவன் பலி - உறவினர்கள் சாலை மறியல்

அறுவை சிகிச்சையில் சிறுவன் பலி - உறவினர்கள் சாலை மறியல்

கிஷோர் 

மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 12வயது சிறுவன் உயிரிழந்தார். அறுவை சிகிச்சையில் தவறிருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேலமங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிஷோர் என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு நேற்று காலை குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை. ஆக்சிஜன் கோளாறு என கூறப்படுகிறது. இதைக்கண்டித்து மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டு பகுதியில் கிஷோரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story