மாணவர்களின் பசியை போக்க காலை உணவு - தனியார் கல்லூரியில் துவக்கம்

மாணவர்களின் பசியை போக்க காலை உணவு - தனியார் கல்லூரியில் துவக்கம்
X

காலை உணவு திட்டம் 

மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஏஆர்சி கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரிக்கு கிராமப்புறங்களிலிருந்து மாணவ மாணவிகள் வருகின்றனர். மாணவர்களுக்குப் பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது ஒரு சில சமயங்களில் சில மாணவர்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு விசாரித்ததில், மாணவர்கள் அவசர அவசரமாக கிளம்பி வரும்போது காலை உணவு அருந்தாமல் வந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லூரி நிறுவனர் விஸ்வநாதன், ஆலோசித்து தினந்தோறும் கல்லூரி வளாகத்தில் காலை உணவு பொட்டலங்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதுகுறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்றது, அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட காளி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் பேசும்பொழுது, இரவு முழுவதும் மனிதன் உணவின்றி இருக்கும் விரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவததான் காலை உணவு ஆகும், காலை உணவு உண்பதில் அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் வரக்கூடிய வியாதிகளுக்கு இதுவே நுழைவு வாயிலாகும் என்று கூறினார். படிப்படியாக நாள்தோறும் 50 பொட்டலங்கள் வைப்பதற்கு கல்லுரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags

Next Story