வீட்டின் கதவை உடைத்து ரூபாய் பத்தாயிரம் திருட்டு
அத்துமீறி வீட்டின் கதவை உடைத்து ரூபாய் பத்தாயிரம் திருடியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அத்துமீறி வீட்டின் கதவை உடைத்து ரூபாய் பத்தாயிரம் திருட்டு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, ஊரணி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதிதாசன் மகன் யுவராஜ் வயது 42. இவர் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், கரூருக்கு சென்று விட்டு மீண்டும் தாந்தோணி மலை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது, இவரது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரம் களவாடப்பட்டது கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து ரூபாய் 10 ஆயிரத்தை களவாடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்
Next Story