ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொன்று இலவசம்- அலைமோதிய கூட்டம்





கரூரில் ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கரூரில் ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம். அலைமோதிய கூட்டம். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பிரியாணி இன்று தவிர்க்க முடியாத உணவாக மாறி உள்ளது. பிரியாணி என்றாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும் வகையில் பிரியாணியின் வாசம் நம்மை ஈர்த்து விடுகிறது. மக்களின் உணவு விருப்பத்தை அறிந்து பல்வேறு பிரியாணி கடைகள் கரூரில் தினமும் முளைத்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் சென்னை சில்க் எதிர்ப்புறம் உள்ள பாரதி நகரில் காலித் பிரியாணி என்ற பெயரில் இன்று புதிய பிரியாணி டிப்போ திறப்பு விழா நடைபெற்றது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இன்று ஒரு நாள் மட்டும் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிப்பு செய்ததால், பிரியாணி பிரியர்கள் இன்று அந்த கடையின் முன்பு அணிவகுத்து நின்று, தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய பிரியாணியை வாங்கிச் சென்றனர். ஒரு சிக்கன் பிரியாணி ரூபாய் 250க்கு விற்பனையானது. மேலும், இந்த நிறுவனத்தில் பக்கெட் பிரியாணி, கடல் மீன்கள், மட்டன் நெய் சுக்கா, வெஜ் சூப், இந்தியன் பிரட்ஸ், பரோட்டா, தந்தூரி, கிரில் சிக்கன் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளும் தயார் செய்து வழங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





