பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

மாவட்ட அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கரூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம். இதில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், புதுமைப்பெண் திட்டத்தை பரவலாக்குதல், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல், குழந்தைகளின் பாலின வன் கொடுமை தடுத்தல், குழந்தைகள் உரிமையை பாதுகாத்தல், பாலின சமத்துவத்தை ஆதரித்து, வன்முறைக்கு எதிராக அணி திரள வேண்டும் எனவும், பெண் சிசுக்கொலையை தடுத்து, பெண் குழந்தைகளை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பிரச்சார பயணம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து ஜவகர் பஜார் வழியாக மாநகராட்சி சென்றடையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பொறுப்பு அலுவலர் தேன்மொழி, உதவி திட்ட அலுவலர்கள் அருண்குமார், சாந்தா, சிந்து மற்றும் ஏற்று ஒன்றியங்களில் இருந்து மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

Tags

Next Story