நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்கலாம் !

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்கலாம் !

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவது குறித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவது குறித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூபாய் 40 லஞ்சம் உங்களை யார் பணம் கொடுக்க சொன்னது? நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அறுவடை பணி நடைபெற்று வருவதால் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் மூட்டைக்கு 40 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் உங்களை யார் 40 ரூபாய் கொடுக்க சொன்னது யார் ஒருவரும் எழுத்துபூர்வமாக புகார் அளிக்காமல் பொதுவாக பேசினால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் அப்படி புகார் அளித்தால்நெல்லை விற்பனை செய்யமுடியாது ஈரப்பதம் உள்ளது என்று அலைக்கழிப்பார்கள் என்று வாக்குவாதம் செய்த விவசாயிகளிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.

Tags

Next Story