சரக்கு வேனும் - லாரியும் நேருக்கு நேர் மோதல் - இருவர் படுகாயம் !

X
காவல்துறை
சரக்கு வேனும் - லாரியும் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
சரக்கு வேனும் - லாரியும் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை பகுதி சேர்ந்தவர் சுரேஷ் வயது 45. இவர் மகேந்திரா வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது வேனில் நாமக்கல் மாவட்டம், மோகனூர், மேலமோட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் வயது 26 என்பவர் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பயணித்தார். அப்போது இவரது வாகனம் வாங்கலில் இருந்து மன்மங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. குடுகுடுத்தனார் பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், போத்துராவுத்தன்பட்டி அருகே உள்ள இரும்புகுழி பகுதியைச் சேர்ந்த மணிவேல் வயது 32 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, சுரேஷ் ஓட்டிச் சென்ற வேன்மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் சுரேஷ் மற்றும் வேனில் பயணித்த தினேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story
