சரக்கு வாகனங்கள் மோதல் - ஒருவர் படுகாயம் !
கரூர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை, அணியாப்பூர் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தர் வயது 25.லாரி டிரைவர். இவர் ஜூலை 13ம் தேதி அதிகாலை 3:45- மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் அவரது லாரியில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் சமத்துவபுரம் பாரதி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, அதே சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், மாமந்தூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் லாரியில், பெங்களூரைச் சேர்ந்த முன்னா ரவிதாஸ் பயணித்தார். மாதவன் ஓட்டி வந்த ஈச்சர் லாரி, எதிர்பாராத விதமாக மோகனசுந்தர் ஓட்டிய லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஈச்சர் வாகனத்தில் வந்த முன்னா ரவி தாசுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மோகனசுந்தர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஈச்சர் வாகனத்தை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாதவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல் துறையினர்.