வள்ளலார் கோயிலில் சிறுவர் சிறுமியரின் கர்நாடக இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமானை தாங்கி நிற்கும் வல்லமை கொண்ட ரிஷப தேவர், உலகில் எல்லோரையும் விட தானே பலசாலி என்ற அகந்தை கொண்டார். அவ்வாறு அகந்தை கொண்ட ரிஷப தேவரின் அகந்தையை அகற்றி அவரை ஆட்கொண்ட தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
குரு பரிகாரம் தலமான இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வதான்யேஸ்வரருக்கு நான்கு கால அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சோடச தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இசை பள்ளி மாணவ மாணவிகள் மோகன ராகம், நாட்டை, நவரச கானடா, கம்பீரநாட்டை,
தீரசங்கராபரணம், கர்நாடக தேவ காந்தாரி, சண்முகப்பிரியா மற்றும் குந்தளவராளி ராகங்களில் அமைந்த பாடல்களை பாடி அசத்தினர். சிறார்கள் இந்த இசை நிகழ்ச்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.