கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்கு

கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்கு

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்கு

மயிலாடுதுறையில் போக்குவரத்துக்கு இடையூரான போராட்டம் நடத்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது போலீசார் வழக்கு செய்தனர்

மயிலாடுதுறை மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகில் காவிரி கரையோரம் கருமாதி மண்டபம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கருமாதி மண்டபம் கட்ட ஆரம்பித்த பணியை ஒரு சமூகத்தினர் எதிர்ப்பால் நகராட்சி பாதியிலேயே நிறுத்திருந்தது. தொடர் போராட்டங்கள் ஈடுபட்டு வந்த மாப்படுகை கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், சாமுவேல் ராஜ் தலைமையில் கருமாதி மண்டபத்தை பொதுமக்களே கட்டும் பணியை தொடங்கினர்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய அணி மாநில செயலாளர் துரைராஜ், மாப்படுகை ராமலிங்கம் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பணியை துவக்கினர். போலீசார் அவர்களை தடுத்தனர், அதை கண்டித்து சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூன்று மணி நேரம் நீடித்த போராட்டம் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக போக்குவரத்து பாதிக்கப்படுகிற வகையில் போராட்டம் நடத்தியதாக சாமுவேல்ராஜ், சீனிவாசன், துரைராஜ், ராமலிங்கம் மேலும் 40 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story