முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் வயது 65. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும், இவர்களது வீட்டின் அருகே பொது இடத்தில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி அளவில், அருகாமையில் உள்ள கலையரங்கம் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள வாய்க்கால் சந்து அருகே சுந்தரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த பாபு, சுந்தரத்தை தகாத வார்த்தை பேசி, அறிவாளால் சுந்தரத்தை வெட்டியுள்ளார். சுந்தரம் இதனை தடுக்க முயன்றதால் அவரது வலது கையில் உள்ள விரல்கள் படுகாயம் அடைந்தது.

உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சுந்தரம் அளித்த புகாரியின் பேரில் கரூர் மாநகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்டு முதியவரை அறிவாளர்கள் வெட்டிய பாபு மீது நவம்பர் 20 ஆம் தேதி மூன்று சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story