காவல் உதவிஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு: தலைமறைவு ரவுடி கைது
கைதான ரவுடி
கடந்த 2006ஆம் ஆண்டு மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில், உதவி ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையின்போது ,பேருந்திலிருந்து இறங்கிய 4 நபர்களை விசாரித்தனர்.
அவர்கள் அரிவாள் வெடிகுண்டு, போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து, உதவி ஆய்வாளரை வெட்டிக் கொல்ல முயன்றபோது , பிடிபட்ட நபர்களை விசாரித்தபோது மயிலாடுதுறையை சேர்ந்த காந்தி, மதுரையை சேர்ந்தவர்களான சுரேஷ், பால்ராஜ், குமார் என்கிற கிருஷ்ணகுமார் ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் மணல்மேடு ரவுடி சங்கர் கூட்டாளி என தெரியவந்தது, அனைவர்மீதும் கொலைமுயற்சி, ஆயுத தடைச்சட்டம் வெடிபொருள் தடுப்புச்சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் மணல்மேடுசங்கரையும் 5வதுகுற்றவாளியாக சேர்த்தனர். நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
மயிலாடுதுறையில் நடைபெற்று வந்த வழக்கில் ,மணல்மேடு சங்கர் போலீஸ் என்கவுன்ட்டரில் 2007 ல் சுட்டுக் கொல்லப்பட்டார், . மற்ற மூன்று பேரும், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராகும் நேரத்தில், கிருஷ்ணகுமார் மட்டும் நீண்ட நாட்களாக ஆஜராகவில்லை.
மயிலாடுதுறை நீதிமன்றம், கடந்த 2009ஆம் ஆண்டு, கிருஷ்ணகுமாருக்கு பிடி வாரண்டு பிறப்பித்திருந்தது. கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை, மயிலாடுதுறை டிஎஸ்பி. சஞ்சீவ் குமாரரின் தனிப்படையினர், கடந்த மூன்று மாத காலமாக மதுரையில் முகாமிட்டிருந்தனர். நேற்று மதுரையில் உள்ள கிருஷ்ணகுமார் வீட்டில், கிருஷ்ணகுமார் வந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது வீட்டை சுற்றிவளைத்து அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.
அவரை மயிலாடுதுறைக்கு அழைத்துவந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2007ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளராக இருந்த, பூண்டிக்கலைச்செல்வனை அவரதுவீட்டில் வைத்து வெட்டியும் வெடிகுண்டு வீசிக் கொன்ற 9 நபர்களில், கிருஷ்ணகுமாரும் ஒருவர்.
பூண்டிக் கலைச்செல்வனை கொலை செய்யவதற்கு வந்த 9 நபர்களில் தனது சகோதருக்கு திருமணம் என்றும் அதற்காக திருமணப் பத்திரிகை வைப்பதுபோல் கிருஷ்ணகுமார் நாடகமாடி ,திருமணப் பத்திரிகையை தட்டில் வைத்து பூண்டி கலைச்செல்வன் காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்குவதபோல் நடித்து அவரைக் கொலை செய்த நபர்தான் இந்த கிருஷ்ணகுமார், என போலீசார் தெரிவித்தனர்.
இவர்மீது தஞ்சை சுரேஷ் கொலை வழக்கு, முத்துப்பேட்டை பிரபல நபர் கொலை, உள்பட பல்வேறு கொலை வழக்குகளில் உள்ளவராகவும். மதுரை சுப்ரமணியபுரம் காவல்நியைத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.