குத்தாலத்தில் காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை

குத்தாலத்தில் காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை

ரத யாத்திரை


காவிரி நதிநீர் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ரத யாத்திரை குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் சிறப்பு வழிபாடு அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், காவிரி பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதிநீர் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 13-வது ஆண்டாக ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி கர்நாடக மாநிலம், தலைக்காவிரியில் தொடங்கிய இந்த யாத்திரை காவிரி நதி செல்லும் பாதை வழியாகச் சென்று நவம்பர் 14-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரிநீர் கடலில் கடக்கும் பகுதியான பூம்புகாரில் நிறைவடைகிறது.

காவிரியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குத்தாலம் காவிரி தீர்த்தப்படித்துறையில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாஆரத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் காவிரி நதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

Tags

Next Story