மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- விழிப்புணர்வு பிரச்சாரம்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- விழிப்புணர்வு பிரச்சாரம்

பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர் 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அரசு துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தரவு கணக்கெடுக்கும் பணி-2023 நேற்று முதல் கரூர் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது. இப்பணி தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிக்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் கணக்கெடுப்பு மேற்கொண்டு சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்து. இதற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு-2023 குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ,மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அன்புமணி, உலக வங்கி, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் கீதா, அரசு அலுவலர்கள் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story